New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Radhika-Reshma.jpg)
நடிகை ரேஷ்மா
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை ரேஷ்மா
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர், தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்., தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் வெளியாக விலங்கு என்ற வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் ரேஷ்மா நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 3.33 என்ற படத்தில் நடித்த ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, மற்றும் ஜீதமிழின் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் ரேஷ்மா வீட்டின் பூஜை அறை தொடர்பான வீடியோ காட்சி ஒன்று இணைதயத்தில் வைரலாகி வருகிறது.
லிட்டில் டாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோசில் ரேஷ்மா தனது சிறிய பூஜை அறையில் இறைவனை வழிபடும் ரேஷ்மா அருகில் இருக்கும் ஒருவருக்கு விபூதி இட்டுவிடுகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.