செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் சன் டிவியின் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
பின்னர் திருமணத்திற்கு பின்னர், சில காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார். மேலும் பகல் நிலவு, உயிர்மை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் பாக்கிய லட்சுமி சீரியலில், கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகியதால், ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது ரேஷ்மாவுக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் வெயிட்டான கதாபாத்திரம் கொண்ட வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது விலகிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ரேஷ்மா, புதிய சீரியலுக்காக இதில் இருந்து விலகுவரா இல்லது இரண்டு சீரியலிலும் நடிப்பாரா என்று சீரியல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“