பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார். அதன்பிறகு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார்

அதனைத் தொடர்ந்து வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில். ராதிகாவாக நடித்து வருகிறார்

அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ராதிக கேரக்டர் தற்போது தனது வில்லத்தனத்தை தொடங்கியுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/