வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ராதிகா என்ற வில்லியாக பதிந்துள்ளார்.
Advertisment
தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி., தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.,
Advertisment
Advertisements
தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானர்.
தொடர்ந்து தமிழில் கோ 2 மணல்கயிறு 2 திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சின்னத்திரையில், வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார். அதன்பிறகு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார் ரேஷ்மா.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது டிவியின் சீரியலில். ராதிகாவாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று பெயர் வாங்கி வந்த ரேஷ்மா தற்போது கோபியை திருமணம் செய்துகொண்டு தனது வில்லத்தனத்தை காட்ட தொடங்கியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”