பாக்கியலட்சுமி சீரியலில் நான் இருப்பேனா? சதீஷை தொடர்ந்து ரேஷ்மா ஷாக்

கோபி கேரக்டரில் சதீஷ் தொடர்பாரா என்று கேட்கிறார்கள். அது எனக்கு தெரியாது சொல்லப்போனால் நானே இந்த சீரியலில் இருப்பேனா இல்லையா என்பது தெரியாது.

கோபி கேரக்டரில் சதீஷ் தொடர்பாரா என்று கேட்கிறார்கள். அது எனக்கு தெரியாது சொல்லப்போனால் நானே இந்த சீரியலில் இருப்பேனா இல்லையா என்பது தெரியாது.

author-image
WebDesk
New Update
Reshma

பாக்கியலடசுமி சீரியல் நடிகை ரேஷ்மா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்வேனா என்பது தெரியாது என ராதிகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லாத்தரசியின் வாழக்கை போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பாக்யா கேரக்டரில் சுசித்ரா, கோபி கேரக்டரில் சதீஷ், ராதிகா கேரக்டரில் ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தனது மனைவி பாக்யாவை விவாகரத்து செய்த கோபி அவரின் முன்னாள் காதலியும் பாக்யாவின் நெருங்கிய தோழியுமான ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தனது வீட்டில் அருகிலேயே ராதிகாவுடன் குடியேறிய கோபி, தற்போது தனது வீட்டிலேயே ராதிகாவுடன் வசித்து வருகிறார். பாக்யா ராதிகா இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிய ரேஷ்மா, அதிகமான ரசிகர்கள் கோபி கேரக்டரில் சதீஷ் தொடர்பாரா என்று கேட்கிறார்கள். அது எனக்கு தெரியாது சொல்லப்போனால் நானே இந்த சீரியலில் இருப்பேனா இல்லையா என்பது தெரியாது.

Advertisment
Advertisements

இந்த சீரியலில் எப்போ வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம். யார் வேணாலும் விலக வாய்ப்புள்ளது. குறிப்பாக நான் தொடர்வேனா என்பது தெரியாது. அதே நிலைமைதான் கோபிக்கும் என்று கூறியுள்ளார். ரேஷ்மாவின் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்னும் ஓரிரு எபிசோடுகளில் தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் அறிவித்திருந்தார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பார் என்பது போன்ற தகவல்கள் வெளியானாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது நடிகை ரேஷ்மாவும் இதே பதிலை கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: