போட்டோ ஷூட், வீடியோ ஷூட் இல்லை… அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற சன் டிவி சீரியல் நடிகை!

Tamil Serial Update : சன்டிவி சீரியின் பிரபல சீரியல் நடிகை ஒருவர்அரசு மருத்துமணையில் பிரசவம் பார்த்துள்ளார்.

Serial Actress Revathy Delivery IN Govt Hospital : சினிமாவை போல சின்னத்திரைக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய நிலையில், சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளே ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைளின் சமூக வலைதள பக்கங்களை ஃபாலோ  செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இதை பயன்படுத்திக்கொள்ளும் நடிகைகளும், தங்களது வீடுகளில் நடக்கும் விஷேஷங்கள் வெளியில் செல்லும்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஒரு சில நடிகைகள் தங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து, அதன்பிறகு ஃபோட்டோஷூட் நடத்தி அதையும் பதிவிட்டு வருகிறனர்.

ஆனால் இதற்கு நேர்மாறாக பிரபல சீரியல் நடிகை ரேவதி, எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நடுத்தர மக்களின் வாழ்வியலை கண்களுக்கு முன்னாள் நிறுத்தும் ஒரு சில சின்னத்திரை இயக்குநர்களில் முக்கியமானவர் திருமுருகன். இவர் இயக்கி மேட்டி ஒலி சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து இவர் இயக்கிய நாதஸ்வரம் கல்யாண வீடு ஆகிய சீரியல்களும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. இந்த இரண்டு சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரதில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகினார். இந்நிலையில், ஏற்கனவே இவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கருவுற்றிருந்த ரேவதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress revathy childbirth in govt hospital

Next Story
Tamil Serial Rating : மீண்டும் பூஜையா? என்னயா கதை ஜவ்வு மாறி போகுது 2021 முடிந்துவிடும் போல… ரோஜா பரிதாபம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com