Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ரிஹானா திடீர் விலகல்... காரணம் இதுதானா? அவரே சொன்ன விளக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ரிஹானா தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pandian Stores Rihana

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ரிஹானா தற்போது விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சன் டி.வி சீரியல் நடிகை என்டரி ஆகியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ஒரு சகோதரர்களின் கதை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 5 வருடங்களா ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதி முடிவுக்கு வந்தது.

முதல் சீசன் அதற்கு சில வாரத்திற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்திற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே சமயம் முதல் சீசன் சகோதரர்களின் கதை என்று ஒளிபரப்பான நிலையில்2-வது சீசன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை போல் பலத்த வரவேற்பு இல்லை என்றாலும், 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகறது.

இதனிடையோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை ரிஹானா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரிஹானா அவ்வப்போது சினத்திரை நட்சத்திரங்கள் பிரச்சனை குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்வார். அந்த வகையில் நடிகர் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இடையேயான பிரச்சனைக்கு விஷ்ணுகாந்தக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரச்சனையிலும் அவருக்கு ஆதரவாக பேசிய ரிஹானா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயிலில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது தவிர்க்க முடியாத தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகியுள்ளதாக ரிஹானா தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதாக பிரேக் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் தான் சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

உங்கள் அனைவரை போலவே நானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார். ரிஹானா வெளியேறியதை தொடர்ந்து, சன்.டிவியின் இனியா சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை மாதவி ரிஹானா கேரக்டரில் நடிக்க உள்ளார். ஆனாலும் ரிஹானாவின் விலகல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment