/indian-express-tamil/media/media_files/2025/06/18/serial-actress-rihama1-2025-06-18-20-37-43.jpg)
சீரியல் நடிகை ரிஹானா
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரிஹானா அவ்வப்போது சினத்திரை நட்சத்திரங்கள் பிரச்சனை குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்வார். அந்த வகையில் நடிகர் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இடையேயான பிரச்சனைக்கு விஷ்ணுகாந்தக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரச்சனையிலும் அவருக்கு ஆதரவாக பேசிய ரிஹானா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயிலில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிய ரிஹானா, மீது தற்போது சென்னை பூந்தமல்லி, காவல் நிலையத்தில் தொழிலதிபர் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த ரிஹானாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்கண்ணன். வேளச்சேரியில் டிஸ்கோ பார் நடத்தி வந்த இவருக்கு, அவரின் நண்பரின் மூலமாக நடிகை ரிஹானா பேகம், அறிமுகமாகி உள்ளார். முதலில் நண்பர்களாக தொடங்கிய இவர்களின் பழக்கம், ராஜ் கண்ணனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அம்மா மற்றும் தனது இரண்டு மகன்களை அறிமுகம் செய்து வைக்கும அளவுக்கு வளர்ந்துள்ளது. அப்போது தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார் ரிஹானா பேகம்.
இதனையடுத்து ராஜ் கண்ணனிடம் ரிஹானாவின் அம்மா தனது மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கூற, அதை ஏற்றுக்கொண்ட அவரும், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந் தேதி ரிஹானாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் இந்து முறைப்படி ரிஹானாவை ராஜ் கண்ணன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து, பூந்தமல்லியில் இருக்கும் வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/18/serial-actress-rihama-2025-06-18-20-28-52.jpg)
மேலும், திருமணத்திற்கு முன்பாக 9 லட்சத்திற்கு வங்கியில் அடமானம் வைத்து இருந்த நகையை மீட்டு கொடுத்த ராஜ் கண்ணன், கேட்டும் போது எல்லாம் ஜிபே' மூலமாக பணம் கொடுத்துள்ளார். இந்த படம் 9 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு, ரிஹானா தான் ஒரு நடிகை என்றும், மற்றவர்களிடம் நான் சகஜமாக பழக வேண்டி இருக்கும், அதை எல்லாம் கண்டுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். அவர் பேசி ஆடியோ ஆதாரத்தையும் ராஜ் கண்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ரிஹானாவிற்கு முதல் கணவருடன் விவாகரத்து ஆகவில்லை என்பது திருமணம் செய்த பிறகு தான் தெரிய வந்தது என்றும், அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் ராஜ்கண்ணன் புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பூந்தமல்லி காவல்துறையினர் ரிஹானா மற்றும் தாய் உட்பட 3 பேரையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.