New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Rithika-Tamil.jpg)
ரித்திகா தமிழ்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
ரித்திகா தமிழ்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா தமிழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் திருமணமாகி கணவனை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் அமிர்தா கேரக்டர் பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொண்டார்.
இதில் அமிர்தா – எழில் கேரக்டர் இடையேயான ரொமான்ஸ் மற்றும் பாக்யா எழில் கேரக்டர்களுக்கு இடையிலான பாசம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்டார். இந்த திடீர் திருமண தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது சில முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் ரித்திகா திருவனந்தபுரம் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.