Tamil Actress Rithika Lifestyel Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தனது வாழ்கையின் முன்னேற்காக செய்யும் முயற்சியே இந்த சீரியலின் திரைக்கதை. இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்று வருபவர் நடிகை ரித்திகா.
தமிழ்செல்வி என்ற பெயர் கொண்ட ரித்திகா கோயம்புத்துரை சேர்ந்தவர். படிப்பின் மீது அலாதி ஆர்வம் கொண்ட இவர், பள்ளிப்படிப்பை முடிக்கும்போதே குடும்ப வறுமையில் திண்டாடியுள்ளார். ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரித்திகா ஒரு டிகிரியுடன் திருப்தியடைவேண்டியதாயிற்று. அதிலும் பார்ட்டைமில் வேலை செய்துகொண்டுதான் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
இதில் பிறந்த நாள் விழாக்கள், விருது விழாக்களில் நுழைவு வாயில் வரவேற்பு பெண்களில் ஒருவராக பார்ட்டைமில் பணியாற்றிய ரித்திகாவுக்கு தினந்தோறும் புது புது நபர்களின்ஆறிமுகம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது பேச்சு திறமையை வளர்த்துக்கொண்ட அவருக்கு, தான் லோக்கல் சேனலில் விஜேவாக வாய்ப்பு கிடைத்தது. பார்ட் டைமில் விஜேவாக பணியாற்றிய அவர், நல்ல வருமானத்திற்காக மும்பையில் தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையே டிக்டாக்கில் நடித்து வந்த ரித்திகா வேலைக்கு செல்லும்முன் பல சேனல்களில் வீஜேவாக வாய்ப்பு கேட்டு தனது புகைப்படம் மற்றும் விபரங்களை கொடுத்துள்ளார். அதன்பிறகு எதேர்ச்சையாக சென்னை வந்த அவருக்கு சீரியல் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. விஜய் டிவியின் ஹிட் சீரியலான ராஜா ராணி சீரியலில், வினோதினி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து சன்டிவியின் திருமகள் சீரியலில் நடித்த இவர், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக அசத்தி வருகிறார்.
இதற்கிடையே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். தொடர்ந்த ஒரு சில ரியாலிட்டி காமெடி ஷோக்கிளில் பங்கேற்று வரும் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முன்னணி காமெடி நடிகர் பாலாவுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இந்த கிசு கிசுவை திறம்பட கையாண்டு வரும் இவர், தொடர்ந்து கில்லாடி ராணி நிகழ்ச்சியிலும் பாலாவுடன் சேர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த இளம் வயதில் தனது குடும்பத்திற்காக தனது கனவுகளை தியாகம் செய்த தமிழ்செல்வி தற்போது தனது திறமையின் மூலம் நாள்தோறும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil