scorecardresearch

ஒன்மோர் போகணும் தெரியுமா… குழந்தைக்கு சொல்லித்தரும் சீரியல் நடிகை : வைரல் வீடியோ

Tamil Serial Update : பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tamil Serial Baakiyalakshmi Shooting Spot Video : இன்றை காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியில் டிவி நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் சீரியல்களுக்கு இளைஞர்கள் ஆதரவு பெரிய அளவில் இருந்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகினறனர்.

புதிய சீரியல்கள் வந்தாலும் பழைய சீரியல்களுக்காக வரவேற்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்யலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில், விதவை மறுமணம் குறித்து எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா. சீரியல் மட்டுமல்லாது விஜய் டிவியிக் கலக்கப்போவது யார் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது சில முக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வரும் ரித்திகா அந்த குழந்தையின் சுட்டித்தனத்தை வீடியோவாக பதிவிட்டு்ளளார்.

யாரும் இல்லாத அறையில் நடந்து வரும் நிலா பாப்பா ரித்திகாவை பார்த்து அம்மா என்று கூப்பிட, ஒன்மோர் ஒன்மோர் போகனும் தெரியுமா என்று சிரித்துக்கொண்டே ரித்திகா குழந்தையிடம் பேசுகிறார். அப்போது அங்கு இருப்பவர்களிடம் நான் வரசொல்லவில்லை அவளாகத்தான் வருகிறாள் என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சோ கியூட் என்று கருத்துக்கள கூறி வரும் நிலையில், ஒருமுறை அல்ல பல முறை இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress rithika tamil selvi posted video on instagram