விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

திருமணமாகி கணவனை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் அமிர்தா கேரக்டர் பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொள்வது பொன்று காட்சிகள் உள்ளது.

இந்த சீரியலில் அமிர்தா – எழில் கேரக்டர் இடையேயான ரொமான்ஸ் மற்றும் பாக்யா எழில் கேரக்டர்களுக்கு இடையிலான பாசம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்டார். அவரது திடீர் திருமண தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வரும் ரித்திகா தற்போது தனது கணவருடன் பொள்ளாச்சி சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“