காதலர் தினத்தை முன்னிட்டு சீரியல் நடிகை தனக்கு தானே தாலி கட்டிக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவு, குடும்பத்தின் மீது பாசம் இல்லாத சுயநலம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோபி தனது முன்னாள் காதலியை 2-வது திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்ட நிலையில், பாக்யாவின் 2-வது மகன், எழில் கணவர் இறந்து குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை திருமணம் செய்துகொண்டார். இதனால் வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும், கோபி வீட்டை எடுத்துக்கொள்வாரா, கோபியின் அம்மா கோபியுடன் சென்றுவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ்செல்வி. இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், அமிர்தாவும் எழிலும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் பலரின் கருத்தாக இருந்தது. நடிப்பு மட்டுமல்லால் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ரித்திகா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அவர் திருமண கோலத்தில் அமர்ந்து தனக்கு தானே தாளி கட்டிக்கொள்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் அமிர்தா எழில் திருமணம் நடைபெற்றது. இதில் தாலி கட்டும் காட்சிக்காக அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா தனக்கு தர்னெ தாலி கட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ பதிவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், யாரும் தன்னை காதலிக்காத காரணத்தால் தனக்கு தானே தாலி கட்டிகொண்ட பெண் வீடியோ வைரல் ஆகி வருகிறது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு ஏன்மா இவ்ளோ கஷ்டப்படுறீங்க கைல முடிச்சு போட்டு கழுத்துல மாட்டிக்க வேண்டியதானே என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil