விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா தமிழ் செல்வி தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வீட்டில் யார் என்ன சொன்னாலும், பாக்யா ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருப்பது பலரின் விமர்சனங்களுக்கு வழி செய்யும் விதமாக உள்ளது.
அதே சமயம் பாக்யாவின் அனைத்து முயற்சிகளுக்கும், அவரது முன்னாள் கணவர் கோபி முட்டுக்கட்டை கொடுத்து வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் ரித்திகா தமிழ் செல்வி. திருமணமாகி கணவனை இழந்த அவர், பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொள்ளும் நிலையில், தற்போது இறந்த கணவன் உயிருடன் வந்துள்ளதால் அமிர்தாவின் வாழ்க்கை எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/jAkSzIPMrtecHUl2Vrli.jpg)
இதனிடையே இறந்த அமிர்தாவின் கணவன் கணேஷ் திரும்பி வரும் எபிசோடுக்கு முன்பே ரித்திகா பாக்யலட்சுமி தொடரில் இருந்து விலகினார். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும்போது திடீரென திருமணம் செய்துகொண்ட அவர், திருமணத்தின் காரணமாகத்தான் சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. தற்போது தனது கணவருடன் ஜாலியாக வெளியூர் சென்றுவரும் ரித்திகா இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சிலேட்டில் கம்மிங் சூன் என்று எழுதி ஹார்ட்டின் போட்டு அருகில் ஒரு குழந்தைக்கு தேவையான பொம்மையை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனையுடன் எங்களை ஆசீர்வதியுங்கள் வினு - ரித்திகா என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரித்திகாவின் இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள நடிகை அம்மு அபிராமி, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ரித்தியா மற்றும் வினு தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“