Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்? நடிகை ரியா சூசக பதில்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியாவும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்? நடிகை ரியா சூசக பதில்

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நடிகை ரியா விஸ்வநாதன் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவர் தற்போது தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த தொடரின் முதல் சீசன் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், 2-வது சீசனும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் ஆல்யா மானசா சஞ்சீவ் இணைந்து நடித்த நிலையில், 2-வது சீசனில் ஆல்யா மானசா நடிகர் சித்து இணைந்து நடித்து வந்தனர்

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் கடந்த வருடம் தனது 2-வது பிரசவம் காரணமாக ஆல்யா மானசா தொடரில் இருந்து விலகினார். இதனை் தொடர்ந்து ஆல்யா நடித்து வந்த சந்தியா கேரக்டருக்கு நடிகை ரியா விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டு நடித்து வந்தார். உயரம் அதிகமாக இவர், ஐ.பி.எஸ் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியாவும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் திடீரென ரியா விலக காரணம் என்ன என்று கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு தற்போது ரியா பதில் அளித்துள்ளார். இதில், நீங்கள் சீரியலில் இருந்து வெளியேற காரணம் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

publive-image

இதற்கு பதில் அளித்துள்ள ரியா இது தொடர்பான காரணம் விரைவில் தெரிய வரும் என்று கூறியுள்ளார். மேலும் காரணம் சொல்லாமல் நீக்கிவிட்டார்களா அப்படி என்றால் விஜய் டிவிக்கும் உங்களுக்கும் எதாவது பிரச்சினையா என்று கேட்டு வருகின்றனர். மற்றொருவர் திருமணம் நிச்சயம் ஆனதால் தொடரில் இருந்து விலகினீர்களா என்று கேட்டதற்கு அது வதந்தி. நான் இன்னும் 3-4 வருடங்களுக்கு திருமணம் குறித்து யோசிக்கமாட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment