scorecardresearch

சேலையில் பார்த்த கண்ணம்மாவா இது? மாடர்ன் உடையில் கலக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன் #Photo Gallery

Tamil Serial Update : சமீபத்தில் கூட மார்டன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்பிரியன் ஆகியோர் மதன்மை வேடத்தில் நடித்தனர்.

இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென இந்த சீரியில்ல இருந்து விலகுவதாக ரோஷ்னி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் பட வாய்ப்பு குவிந்ததால், ரோஷ்னி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து கண்ணம்மா ரோலில் டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி நடித்து வருகிறார்.

தற்போது மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்துள்ள ரோஷ்னி குக் வித் கோமாளி சீசன்  3-ல் பங்கேற்றுள்ளார்.

சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் பதிவிடும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று.

பாரதி கண்ணம்மா சீரியலில் சேலையில் பார்த்து பழகிய ரோஷ்னி சமூக வலைதளங்களில் மாட்ர்ன் உடையில் காட்சியளித்துள்ளார்.

சமீபத்தில் கூட மார்டன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress roshini haripriyan modern dress collection