விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தனக்கென தனி இளம் ரசிகர் பட்டாளமே உருவாகி வைத்துள்ளவர் ரோஷினி ஹரிப்பிரியன்.

பொதுவாக டார்க் ஸ்கின் ஹீரோயின்களுக்கு திரைத்துறையில் வேல்யூ இருக்காது. இதனாலேயே மும்பை, கேரளா என மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்கள் திரைப்படம் மற்றும் சீரியலில் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனாலேயே மும்பை, கேரளா என மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்களிடம் தான் நமது ஹீரோக்கள் அதிகம் டூயட் பாடி வருகிறார்கள்.

ஆனால் தற்போது சீரியலில் டஸ்கி ஸ்கின் நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் என்டரி ஆனவர்தான் ரோஷ்னி.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய “ஸ்கார்ஸ் ஆஃப் சொசைட்டி” என்ற தமிழ் குறும்படத்தில் அறிமுகமானார்.

மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜூவல்லரி மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களில் நடித்து தன்னை நிரூபித்த ரோஷ்னி சீரியலில் நடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் இருப்பது கூடுதல் ஸ்பெஷல். தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் ஆல்பம் பாடல் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரோஷ்னி வெளியிட்டுள்ள புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil