scorecardresearch

ஓ… மை காட்… இதுதான் நவரசமா? ரோஷினி டிப்ரண்ட் க்ளிக்ஸ்

மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது.

Roshini
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு கல்லூரி முடிக்கும் வரையில் இவருக்குள் என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.

Roshini (1)
ரோஷினி ஹரிப்பிரியன்

எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார். அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக் கொண்டிருந்தேன்.

ரோஷினி ஹரிப்பிரியன்

கல்லூரி முடித்தபிறகுதான் எதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. அதன்பிறகு சுய தொழில் செய்யலாம் என, நானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்

ரோஷினி ஹரிப்பிரியன்

அதன்பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ரோஷினி ஹரிப்பிரியன்

எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது. தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார்.

ரோஷினி ஹரிப்பிரியன்

அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷ்னி தற்போது ஆல்பம் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார். இது தொடர்பான ப்ரமோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ரோஷினி ஹரிப்பிரியன்

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி தற்போது இலைகளுக்கு நடுவில் இருப்பது போன்று இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களில் கோபம் சிரிப்பு, வியப்பு என பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress roshini haripriyan new clicks viral on social