scorecardresearch

புன்னகை ஒன்றே போதுமே… சிரிப்பால் ஈர்க்கும் பழைய கண்ணம்மா

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

புன்னகை ஒன்றே போதுமே… சிரிப்பால் ஈர்க்கும் பழைய கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ரோஷ்னி ஹரிப்பிரியன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகி முதல் சீரியலிலேயே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் சின்னத்திரை நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன்.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவர், அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

சீரியலில் இருந்து விலகிய ரோஷ்னி, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தொடர்ந்துஇவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த செய்தி ஒரு வதந்தியாகவே போய்விட்டது. ஆனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் சிறப்பான புன்னகையுடன் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர் ஆத்தா ஒரு வழியா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாச்சு ஆத்தா என்று பதிவிட்டுள்ளார். ரோஷ்னி பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தபோது பாரதிக்கு டி.என்.ஏ எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress roshini haripriyan new photo gallery update