Advertisment

இயற்கை அதன் சிறந்த நிலையில்... நடிகை ரோஷ்னி வைரல் போட்டோஸ்

இரண்டு வருடம் ஐ.டி துறையில் வேலை பார்த்த அவர், ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
மகிழ்ச்சியும்... புன்னகையும்... மனதை ஈர்க்கும் ரோஷினி ஸ்மைலி க்ளிக்ஸ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.

Advertisment
publive-image

சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி, சென்னை செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

publive-image

இரண்டு வருடம் வேலை பார்த்த அவர், ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் இருந்தாலும், மாநிறத்தில் இருப்பதால், அதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட்டாராம்.

publive-image

பின்னர் ஸ்கின் டோன் நன்றாக இருப்பதாகக் கூறி, வாய்ப்புகள் வந்ததாம். பின்னர் மாநிறமாக இருக்கும் பெண்ணை மையமாக வைத்து, சீரியல் எடுப்பதாகக் கூறி ரோஷினியை அணுகினார்களாம். அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

publive-image

பள்ளியிலும், கல்லூரியிலும் நிறத்தால் நிறைய இறக்கங்களை சந்தித்த ரோஷினி, கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் தான் நிறம் குறித்த நிதர்சனத்தைப் புரிந்துக் கொண்டாராம். அதோடு பாரதி கண்ணம்மா சீரியலில் டார்க் மேக்கப் இல்லாமல், ஒரிஜினல் ஸ்கின் டோனோடு தான் நடித்துள்ளார் ரோஷினி.

publive-image

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அவர் விலகிவிட்டாலும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment