விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்கான இடத்தை பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் ரோஷ்னி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் விலகியதாக கூறியிருந்தார்.

அதன்பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரியாலிட்டி ஷோவில் எண்ட்ரி கொடுத்த ரோஷ்னி, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது சீரியல்களில் நடிக்காமல் இருக்கும் ரோஷ்னி ரியாலிட்டி ஷோ மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த இசை ஆல்பத்தின் ப்ரமோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது ஆரஞ்சு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil