பாரதி கண்ணம்மா முதல் சீசன் மூலம் அதிகமான ரசிகர்களை சம்பாதித்த நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
கல்லூரி முடிக்கும் வரையில் தனக்குள் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் தவித்த இவர், எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார்.
சுய தொழில் செய்யலாம் என, நானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது. தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார்.
சமீபத்தில் வெளியாக சூரியின் கருடன் படத்தில் வில்லன் உண்ணி முகுந்தனின் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார் ரோஷ்னி. இந்த படம் இந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படமாக மாறியது.
அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர். அடுத்து வெப்சிரீஸ் மற்றும ஒரு சில திரைப்படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.