விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் ரோஷினி ஹரிப்பிரியன். இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு கல்லூரி முடிக்கும் வரையில் இவருக்குள் என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது. எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார்.
அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்தபிறகு சுய தொழில் செய்யலாம் முடிவு செய்தேன்.
தானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டேன். அதன்பிறகு மாடலிங் துறைக்கு வந்தேன் என ரோஷ்னி கூறியுள்ளார்.
மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது. பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார்.
அதன்பிறகு ஆல்பம் பாடல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாக இருந்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது காட்டுக்குள் இருந்து எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.