விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார்.

மேலும் இவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளுக்காகவே பாரதி கண்ணம்மா சீரியலை பாக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கனிசமாக உயர்ந்தது.

ஆனால் திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்னி பாதியில் விலகுவதாக அறிவித்தார். அவரது விலகலுக்கான காரணம் தெரியாத நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை நிரூபித்துள்ளார் ரோஷ்னி.


தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் ரோஷ்னி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil