விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் காயத்ரி.

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் மதுரையை சேர்ந்தவர். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார்.

தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.

2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சாய் காயத்ரி சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகுவதால திடீரென அறிவித்தார். இந்த சீரியலில் தனது கேரக்டர் சரியில்லை. இப்படியே சென்றால் தனது சினிமா வாழக்கை சரியாக இருக்காது என்று கூறி அதில் இருந்து விலகிவிட்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சாய் காயத்ரி விளம்பர மாடல் போன்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“