ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாய் காயத்ரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழகத்தின் தென்பகுதியான மதுரையை சேர்ந்த சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர். ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisement
கல்லூரியில் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்த இவர், அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார். 2011விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.
தொடர்ந்து ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்த இவர், தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்துள்ளார். இவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். அகிலா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதன்பிறகு பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்பிறகு பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil