Advertisment

சுடிதார் டிசைன்ஸ் வேணும்னா இவர் கிட்ட கேட்டுக்கலாம்... சாய் காயத்ரி வைரல் க்ளிக்ஸ்

சீரியலில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுடிதார் டிசைன்ஸ் வேணும்னா இவர் கிட்ட கேட்டுக்கலாம்... சாய் காயத்ரி வைரல் க்ளிக்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் காயத்ரி புவனேஷ். மதுரையை சேர்ந்தவர். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.

publive-image

காலேஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.

publive-image

2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.

publive-image

அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு பெற்ற சாய் காயத்ரி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மீனாவுடன் இவர் செய்யும் சண்டைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

publive-image

சீரியலில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Saai Gayathri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment