/indian-express-tamil/media/media_files/nR6V2m1GlKXfbjU0Z9ta.jpg)
சின்னத்திரை நடிகை சாய் காயத்ரி
/indian-express-tamil/media/media_files/5mKgdOoQfg88iaxXQDKL.jpg)
கல்லூரி படிப்பு
மதுரையை சேர்ந்த சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/99ZTZg69pXLEpkh70jC9.jpg)
சின்னத்திரை
தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.
/indian-express-tamil/media/media_files/N75UvLzcW3JxrLAnmxJD.jpg)
அறிமுகம்
2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/6luF4nobxLPykp7FMPFM.jpg)
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/EZTxacYywuvpD3O4dMeV.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சாய் காயத்ரிக்கு நல்ல ரீச் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இந்த சீரியலில் நடிப்பது தனது சினிமா வாழக்கை சரியாக இருக்காது என்று கூறி விலகிவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/fhgPcHkTDD17qvo0j3Mq.jpg)
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சாய் காயத்ரி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார், இதில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/3jIjQVEUhyLCLiMI8J0T.jpg)
சமூகவலைதளங்கள்
இதில் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சாய் காயத்ரி விளம்பர மாடல் போன்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.