சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கே சமுமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதில் இந்த நடிகைகள் ஒரு சிறிய செயல் செய்தால் கூட ரசிகர்கள் அதை பெரிய அளவில் டிரெண்டிங் செய்து விடுவார்கள். அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை செய்த செலுக்கு ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு நடிகையும் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாவர் சமீரா ஷெரிப். இந்த சீரியலில் அன்வர் உடன் ஜோடியாக நத்திருந்த சமீரா அவரையே காதலித்து சீரியல்முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது சமீரா ஷரீப் கர்ப்பமாக உள்ள நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.
அந்த வீடியோவில், டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என அவர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் செய்யலாமா என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது சமீரா "என் குழந்தையை எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும், நீங்கள் எனக்கு பாடம் எடுக்காதீங்க" என கூறி ரசகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு ஒரு ரசிகர், உங்களுக்கு அட்வைஸ் செய்பவர்களை எதிரிகளை போல பேசுகிறீர்களே என என கூற அதற்கும் பதில் கூறியுள்ள சமீரா, 'என்னை பற்றி அக்கறையுடன் பேசுபவர்களை நான் எதுவும் சொல்லவில்லை, மிகவும் திமிராக என்னிடம் பேசுபவர்களுக்கு தான் பதிலடி கொடுக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
மேலும் 'ஆக்டிவாக இருப்பது கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியம். அது பற்றிய விழிப்புணர்வை நான் ஏற்படுத்த நினைக்கிறேன். நான் குதிக்கவில்லை, trampolineல் தான் இருக்கிறேன்' என கூறியுள்ளார் சமீரா இப்படி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிறகும் நெட்டிசன்கள் அவரை பற்றி திட்டி தீர்த்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil