சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் சமீப காலமாக திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் மற்றும் பாலியல் தொடர்பான சீண்டல்கள் குறித்து பேசி வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் நடிகை சந்தியா இணைந்துள்ளார்.
சன் டிவியில் பிரபலமான வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி. ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்திருந்த இவர், சன்டிவியின் சந்திரலேகா சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலும் நடித்துள்ள சந்தியா, தற்போது தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வரும் நாய்கள் தொடர்பான பதிவுகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சந்தியா தனது வாழ்வில் சந்தித்த கசப்பான அனுபவததை பற்றி பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியள்ளது.
இதில் கடந்த 2006ம் ஆண்டு 'செல்லமடி நீ எனக்கு' என்ற டைட்டில் பாடல் காட்சி கும்பகோணத்தில் ஒரு யானையுடன் ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த யானை என்னை தாக்கியது. இதனால் எனக்கு ஏழு இடங்களில் எறும்பு முறிவு ஏற்பட்டதால், அங்கேயே மயங்கி விட்டேன். யானை தும்பிக்கையால் என்னை நசுக்கியதால், தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தேன். உடனே அங்கிருந்த டான்சர்கள் என்னை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போது டான்சரில் ஒருவன் எனக்கு உதவி செய்வது போல என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தான். அந்த நேரத்தில் நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி இருந்தேன், பினத்தை கூடவா இப்படி செய்வார்கள்? இதுதான் என் வாழ்வின் மிகவும் கஷ்டமான விஷயம்.
அந்த நேரத்தில் என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு நடிகை சந்தியா பேசியுள்ளார். சந்தியாவின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“