Advertisment

சிறகடிக்க ஆசை சீரியல் : வெள்ளித்திரையில் அறிமுகமாகும் நடிகை சங்கீதா ; புதிய அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும நடிகை சங்கீதாவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Siragadik As

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை

சின்னத்திரை சீரியல் நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாகி வரும் நிலையில், இந்த பட்டியலில் புதிதாக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சங்கீதா, தற்போது இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றி வசந்த கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரயலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. படிக்காத தம்பதிகளாக மீனா – முத்து ஜோடி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றமும் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் முத்து – மீனா தம்பதிக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த சீரியலில், கோமதி பிரியா நடித்து வரும் மீனா கேரக்டரில் தங்கை சீதா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. சன்டிவியின் மீனா சீரியலில் தேவி என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சங்கீதா தற்போது புதிய படம் ஒன்றில், முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ரசிகர்கள் பலரும் சங்கீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன்.டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment