சின்னத்திரை அட்ஜெஸ்ட்மெண்ட்? எனக்கு அப்படி எந்த அழைப்பும் வரல; சிறகடிக்க ஆசை நடிகை ஓபன் டாக்!
சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகி மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ். இவரது கேரகடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும்
சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகி மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ். இவரது கேரகடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும்
சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டும் நடைமுறை இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், தன்னிடம் இதுபோன்று யாரும் பேசவில்லை என்று சீரியல் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.
Advertisment
சின்னத்திரைவில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சீரியலில், நாயகி மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ். இவரது கேரகடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஹீரோ முத்துவுக்கும், சீதாவின் கணவர் அருண்குமாருக்கும் இடையே மோதல் இருப்பதால், இனி சீதா யாருக்கு சப்போர்ட்டாக இருப்பார்? கணவருக்கு ஆதரவாக மாமாவுக்கு வில்லியாக மாறுவாரா? அல்லது இருவருக்கும் இடையில் சமாதானம் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, புரோவினோ டிவி யூடியூப் சேனலுக்கு நடிகை சங்கீதா அளித்த பேட்டியில்,தனது சின்னத்திரை அனுபவம் குறித்து பேசியுள்ளார். இந்த சீரியலில், நானும் எனக்கு தம்பியாக நடித்துள்ள நடிகரும் தான் புதுமுகம், வெற்றி வசந்த யூடியூப்பில் பண்ணிட்டு இருக்காரு, மீனா எங்களுக்கு சீனியர் ஏற்கனவே சில சீரயில்களில் நடித்துள்ளார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில், நீ இப்படி பேசு, அப்படி செய் என்று முத்து எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். அதேபோல் மீனாவுக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம்.
Advertisment
Advertisements
கடந்த இரண்டரை வருஷா இப்படித்தான் அவர்கள் சப்போட்டுடன் போய்கிகட்டு இருக்கு. நான் நடிக்க தெரியாமல், நின்று அதிக டேக் பொய்க்கொண்டு இருந்தாலும், அவர்கள் பொறுமையாக நின்று சொல்லிக்கொடுப்பார்கள். மீடிவியாவில் பெண்கள் என்றாலே வீடு மற்றும் உறவினர்கள் பயப்படுவார்கள். ஆனால் இதில் வந்து திறமையை நிரூபித்துவிட்டால் அவர்களை சமாளித்துவிடலாம். சினிமா மற்றும் சின்னத்திரையில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் சின்னத்திரை மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கு அப்படி எந்த காலும் வந்ததே இல்லை.
ஆடிஷன் போவேன் திரும்ப கால் வந்தால், நமக்கு அந்த ப்ராஜெக்ட் இருக்கு. அப்படி வரவில்லை என்றால், அந்த வாய்ப்பு நமக்கு இல்லை என்று நினைத்து அடுத்து முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.