/indian-express-tamil/media/media_files/ahyEW7ZZFtopmnEcUP8e.jpg)
மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரபல சீரியல் நடிகை சாந்திக்கு விஜய் டிவி சீரியல் நடிகை மருமகளாக மாறியுள்ளார்.
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சந்தியா. திருவண்ணாமலை அருகே உள்ள கலசப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த இவர், வழக்கறிஞராக முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும், பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரலமானார். அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ஆதித்யா டிவியின் காதல் டாட் கம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.
இதன் மூலம் சன்டிவியின் கண்மணி சீரியலில் அறிமுகமான சந்தியா, அடுத்து விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு என சில சீரியல்களில் நடித்திருந்த சந்தியா தற்போது விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சந்தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
முரளிகிருஷ்ணா என்பவரை சந்தியா திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம், வரும் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட்டி ஒலி சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமான நடிகை சாந்தியின் மகன் தான் இந்த முரளி கிருஷ்ணா. தற்போது சாந்தி சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நிலையில், அவரது மருமகளாக சந்தியா நடித்து வருகிறார்.
சீரியலில் தனக்கு ரீல் மகளாக நடித்த நடிகையை சாந்தி தற்போது தனது ரியல் மருமகளாக மாற்ற உள்ளார். இந்த திருமணம் முழுக்க முழுக்க அரேஜ் மேரேஜ் என்று கூறப்படுகிறது. கிழக்கு வாசல் திரைப்படத்தில் குருப் டான்சராக அறிமுகமான சாந்தி, மெட்டி ஒலி சீரியலில் டைட்டில் பாடலுக்கு நடமாடி பிரபலமானார். தற்போது நடன இயக்குனராக இருக்கும் இவர், விஜயின் லியோ படத்திலும் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் சக்திவேல் மட்டுமல்லாமல் முத்தழகு என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.