Advertisment

கேரக்டர் பிரச்னை: இயக்குனர் சொன்ன வார்த்தை; விலகியது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விளக்கம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை சத்யா சாய் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actress Sathya sai

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயிலின் 2-ம் பாகத்தில் பாண்டியன் மகள் அரசி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா சாய் ஏற்கனவே இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்து பாதியில் விலகிய நிலையில், தனது விலகலுக்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. இடையில் சீரியல்களில் நடித்து வரும் நடிகைள் விலகினால் அவர்களுக்கு பதிலாக அந்த கேரக்டரில் மற்றொரு நடிகை நடிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. 

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷீலா ராஜ்குமார் விலகியதை தொடர்ந்து அந்த சீரியலில் கமிட் ஆகி நடித்து வந்தவர் நடிகை சத்யா சாய். அந்த சீரியல் முடிந்த பிறகு, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கமிட் ஆனார். இந்த சீரியலில் முஸ்லீம் பெண்ணாக ஒரு சில எபிசோடுகளில் நடித்த சத்யா சாய் அதன்பிறகு சீரியலில் இருந்து விலகினார். 

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், பாண்டியனின் மகள் அரசி என்ற கேரக்டரில் நடித்து வரும் சத்யா சாய், முதல் பாகத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடி நீங்கள் தான். இந்த சீரியலின் கடைசிவரை உங்க கேரக்டர் இருக்கும் என்று சொல்லி போட்டோஷூட் எடுத்தார்கள்.

அனைத்து போட்டோஷூட்களும் சரியாக அமைந்து, முஸ்லீம் கேரக்டரில் நடிக்கவும் போட்டோஷூட் எடுத்தார்கள். எல்லாம் முடிந்து நடிக்க தொடங்கியபோது, ஒரு சில வாரங்கள் கழித்து, சீரியலில் முஸ்லீம் கேரக்டர் இருப்பது கொஞ்சம் பிரச்சனையாகிறது. அதனால் அந்த கேரக்டர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் இருந்து விலகிவிட்டேன். 

தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தொட்ங்கும்போது என்னை ஞாபகம் வைத்து அழைத்தார்கள். எனக்கும் இந்த கேரக்டர் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன் என்று சத்யா சாய் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pandian Stores tamil serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment