ஸ்கூல் யூனிஃபார்மில் பிரபல சீரியல் நடிகை... நல்லா பாருங்க யாருனு தெரியும்!

சன் டி.வியின் பிரபல சீரியல் நடிகையின் ஸ்கூல் யூனிஃபார்ம் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டி.வியின் பிரபல சீரியல் நடிகையின் ஸ்கூல் யூனிஃபார்ம் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Shabana1

ஸ்கூல் யூனிஃபார்மில் பிரபல சீரியல் நடிகை

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து இணையத்தில் ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறது. இந்த தேடலில் கிடைக்கும் தகவல்களை தங்களது வலைதள பதிவுகளில் வெளியிட்டும் வருகின்றனர்.

Advertisment

இதில் சில நட்சத்தரங்கள் தங்கள் இப்போதைய புகைப்படம் மற்றும் சிறுவயது புகைப்படம் இரண்டையும் வெளியிட்டு வித்தியாசம் காட்டுவார்கள். இதில் குறிப்பாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்சி வருகின்றனர். இதுபோன்ற புகைப்படங்கள் தற்போது இணையதங்களில் அதிகம் உலா வந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி சின்னத்திரை நடிகை ஒருவரின பள்ளி காலத்து புகைப்படம் ஒன்று இணயைத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் படித்த தோழி ஒருவர் அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேக் செய்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷாபனா சாஜன் ஆர்யன் தான்.

நடிப்பதற்கு எதிர்ப்பு... அம்மா ஆதரவு... ஷாபனா ஷாஜகான் பார்வதி ஆன கதை

Advertisment
Advertisements

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஷபானா ஷாஜன் அந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்தார். இஸ்லாமிய பெண்ணான இவர், தமிழ் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதில் ஆதி பார்வதி இடையேயான ரெமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த அதிக வரவேற்பு இருந்ததே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

கேரளாவில் பிறந்த இவர் மும்பையில் தனது படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சீரியலுக்கு வந்த ஷாபனாவுக்கு முதல் சீரியலான செம்பருத்தி பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கான பாராட்டுக்களையும் பெற்று தந்தது. 2016-ம் ஆண்டு மலையாள சீரியல் ஒன்றில் அறிமுகமாகி இருந்தாலும், ஷாபானவுக்கு அடையாளமாக மாறியது செம்பருத்தி சீரியல் தான். சமீபத்தில் செம்பருத்தி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்,

இதனிடையே விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து வந்த ஷாபனா அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Serial Actress Shabana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: