சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட்… பன்முக திறமை கொண்ட கண்ணம்மாவின் சித்தி

Tamil Serial Update : சசிகுமார் தயாரிப்பில் வெளியான பசங்க படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், சுல்தான், களவாணி 2ஆகிய படங்களில் நடித்துள்ளார்

Tamil Serial Actress Lifestyle Update : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில பெரும் பிரபலம்.  கணவரை பிரிந்த ஒரு பெண் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள், வெண்பா குறித்த உண்மை எப்போது தெரிய வரும் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந் சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வருபவர் நடிகை செந்தில்குமாரி. சசிகுமார் தயாரிப்பில் வெளியான பசங்க படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், சுல்தான், களவாணி 2ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை மீனாளின் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதியின் இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, கோலிசோடா, படங்களில் துணை நடிகையாக நடித்து புகழ்பெற்ற இவர், ரியோ நடித்த கனா காணும் காலங்கள் தொடரில் டீச்சராக நடித்திருந்தார். ஆனால் அப்போது பிரபலமாகாத இவர், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீசன்3 –ல் தெய்வானை கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.

நடிப்பை தாண்டி குரலில் வளம் பெற்ற செந்தில்குமாரி, கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியுள்ளார். மேலும் அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் குரல் கொடுத்துள்ளார். சின்னத்திரை பெரியத்திரை என நடிப்பில் கலக்கி வரும் செந்தில்குமாரி அவ்வப்போது டப்பிங்கிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress senthilkumari lifestyle update

Next Story
Vijay TV Serial; அக்கறையாக விசாரிக்கும் வெண்பா… சந்தேகமாகும் அஞ்சலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com