பிரபல நடிகை பிரேமி வெங்கட் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து வதந்தி பரவிய நிலையில், தற்போது அவர் தனது விலகலை உறுதி செய்துள்ளார்.
ஹிட் சீரியல்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணே கலைமானே. இந்த சீரியலில் விஜயலட்சுமி கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை பிரேமி வெங்கட். சமீப காலமாக இவர் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து பிரேமி வெங்கட் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்து வந்தார்.
இதனிடையே தற்போது பிரேமி வெங்கட் தான் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரேமி வெங்கட் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் அனைவருக்கும் அதைத் தெரிவிக்க விரும்பினேன், கண்ணே கலைமானே சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினேன்… கண்ணே கலைமானே சீரியலில் விஜயலட்சுமியை எனக்கு வழங்கியதற்கு நன்றி… அனைவரையும் வேறொரு திட்டத்தில் சந்திப்போம் நன்றி. என்று கூறியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட பிரேமி வெங்கட், கடந்த 2019-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கிய ‘நாச்சியார்புரம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சுந்தரி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கண்ணே கலைமானே தொடரில் இருந்து பிரேமி வெங்கட் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜயலட்சுமி கேரக்டரில் நடிக்க உள்ளது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அந்த கேரக்டரில் நடிக்க நடிகை உஷா எலிசபெத் நடிக்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீரியலில் பவித்ரா கவுடா, நந்த கோபால் மற்றும் ராஷ்மி பிரபாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் தேவிப்ரியா, லதா ராவ் ஆ லதா, பிரேமி வெங்கட், சஹஸ்ரா, டேவிட் சாலமன் ராஜா, ஷீல், ஆர். அரவிந்தராஜ் மற்றும் ஆதித்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில், பல தமிழ் தொலைக்காட்சி பிரபலங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்லது பிற காரணங்களால் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அர்ச்சனா, ரியா விஸ்வநாதன், காவ்யா அறிவுமணி மற்றும் பலர் தங்கள் நிகழ்ச்சிகளை பாதியிலேயே விட்டுவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“