செம்பருத்தி ஷபனாவை மணந்த செழியன் யார்? படிப்பு, சம்பளம், குடும்பப் பின்னணி!

Tamil Serial Updadate : ஜீதமிழின் செம்பருத்தி விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலை ஒன்றினைக்கும் வகையில் பார்வதியும் செழியனும் திருமணம் செய்துகொண்டனர்.

Tamil Serial Actress Shabana And Aryan Marriage Update : ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ஷாபனா பாக்யலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து புகழ்பெற்ற வேலு லட்சுமணன் என்ற ஆர்யனுடன் திருமண வாழ்வில் இணைந்துளளார்.

திரைத்துறையை பொருத்தவரை தற்போது திரைப்படங்களை விட சின்னததிரை சீரியல்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சீரியல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வியலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சின்னத்திரை நடிகர் நடிகைகளின் சமூக வலைதள பக்கங்கள், அவர்களின் குடும்பத்தினர் படிப்பு, வேலை, உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ள முயற்சிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அந்த வகையில், தான் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மனதை வென்றவர் நடிகை ஷாபனா. ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி என்ற சீரியலில் பார்வதியாக நடித்து பிரபலமான இவரும் பாக்யலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து பிரபலமாகியுள்ள வேலு லட்சுமணன் என்கிற ஆர்யனுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப இருந்து வருகிறது. அதில் பாக்யலட்சுமி சீரியலி்ல் செழியன் கேரக்டர் ரசிகர்கள் மத்தியி்ல் கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்தாலும், ஆர்யனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்தான்.

அதேபோல் செம்பருத்தி சீரியலில் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், பார்வதிக்கும் அந்த கேரக்டரில் நடித்து வரும் ஷாபனாவுக்கு ரசிகாகள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் இவர்களின் நீண்டநாள் காதல் பயணம் முடிவுக்கு வந்து வாழ்ககை பயணம் தொடங்கியுள்ளது. இந்த காதல் ஜோடிக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதிக பெண் ரசிகைகளை கொண்ட ஆர்யன் தமிழத்தில் தென் மாவட்டான காரைக்குடியை சேர்ந்தவர். பள்ளி படிப்பை வேலம்மாள் பள்ளியில் முடித்த சென்னையில். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். சினிமா மீது ஆர்வம் கொண்ட ஆர்யன், அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மாடலிங், ஷார்ட் பிலிம்களில் என பலவற்றில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார்.

இதனால் பிரபலமான அவருக்கு, விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் துணை நடிகராக நடித்து வரவேற்பை பெற்ற ஆர்யனுக்கு அடுத்ததாக விஜய் டிவியின் தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.10,000 என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

அப்பாவை ரோல் மாடலாக வைத்து வாழ்கையில் முன்னேறி வரும் ஆர்யன், பாக்யலட்சுமி சீரியலில்.அம்மாவை பற்றி கவலைப்படாத சுயநலவாதியாக நடித்து பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறார். இந்த விமர்சனமே அவருக்கும் அவரது நடிப்பு திறமைக்குமான பாராட்டு என்று கூறலாம். பாக்யலட்சுமி சீரியலின்தொடக்கத்திலேயே திருமணம் செய்துகொண்ட செழியனுக்கு தற்போது உணமையான திருமண வாழ்வில் இணைந்துள்ளார். இவர்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் முதல் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress shabana and aryan wedding update in tamil

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com