scorecardresearch

‘கடவுள் வழங்கிய பெரும் கொடை’: சீரியல் ஸ்டார்ஸ் ஷபனா- செழியன் காதல் உறுதி

Tamil Serial Update : செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாதனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை முதல்முறையாக பகிர்ந்துள்ளார்.

‘கடவுள் வழங்கிய பெரும் கொடை’: சீரியல் ஸ்டார்ஸ் ஷபனா- செழியன் காதல் உறுதி

Zee TamilSerial Actress Shabbana Post : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் செம்பருத்தி. நடிகை பிரியா ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் ஷபானா நாயகியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வரும் இந்த சீரியலில் தற்போது பெண் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாயகி ஷபானாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருகிறது.

இந்நிலையில், நாயகி ஷபானா தற்போது முதல்முறையாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் முக்கிய தொடர்களின் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஆரியன். இவரும் ஷபானாவும் காதலிப்பதாக தகவல் பரவியது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஆரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒரு மாதிரியான மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிய நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஷபானா ஆரியனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress shabana introduces his boyfriend