Advertisment

பிரபல சீரியலில் இருந்து நடிகை ஷபானா விலகல் : காரணம் இதுதானா? வைரல் பதிவு

சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியல் நடிகை ஷபானா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shabana

சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்த நடிகை ஷபானா தற்போது திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ஷபானா. 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், சன்டிவி சீரியல்களுக்கு போட்டியான டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வந்த்து. ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்த்தை தொடர்ந்து ஷபானா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே சம்மய், இதனிடையே செம்பருத்தி சீரியலில் நடித்து வரும்போதே, பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து வந்த  ஷபானா அவரை திருமணமும் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது ஆர்யன் ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும், ஷபானா சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலிலும் நடித்து வந்தார்.

இதனிடையே தற்போது ஷபானா மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றாலும் இந்த சீரியலில் இருந்து இரண்டு முக்கிய காரணத்தால் நான் விலகுறேன். இந்த சீரியலில் நான் நடித்து வந்த அஞ்சலி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது.

அந்த கேரக்டர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கேரக்டராக எனக்கு அமைந்தது. அதே நேரத்தில் எனது புதிய ப்ராஜெக்ட் காரணமாகவும், புதிய கேரக்டர் காரணமாகவும் நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன்.  உங்களிடம் இருந்து ஷபானா என்ற அஞ்சலி விடைபெறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஷபானாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே ஷபானா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக பலரும் கூறி வரும் நிலையில், இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. அதே சமயம் இந்த சீரியலில் அடுத்து அஞ்சலி கேரக்டரில் நடிக்க உள்ள நடிகை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Shabana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment