பிரபல சீரியல் நடிகையாக ஷபானா, சக சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் காதலிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு இப்போவே இதை டெலிட் பண்ணிடு என்று ஷபானா கமெண்ட் பதிவிட்டுள்ளார்,
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற டி.வி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ஷபானா. இந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் ஷபானாவுக்கு கார்த்திக் ஜோடியாக நடித்தார். இருவருடையே காம்போவும் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இவர்களுக்காக தனி ரசிகர்கள் வட்டாரமே உருவானது.
இந்நிலையில், விஜய் டி.வியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தவரும், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் `மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் நாயகனாக நடித்து வரும் ஆர்யனை காதலித்த ஷபானா –அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு சன் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மிஸ்டர் மனைவி' தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஷபானா சமீபத்தில் அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஷபானா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷபானா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் அவரது கணவரான ஆர்யன் வெளியிட்டு வரும் பதிவுகளுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்து வரும் ஷபானா தற்போது காதலிக்கும் சமயத்தில் எடுத்த வீடியா பதிவு ஒன்றை நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இதை இப்போவே டெலிட் பண்ணிடு என்று கமெண்ட் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ரிப்ளே கொடுத்து வரும் நிலையில், கியூட் மெமரிஸ் இதை எதற்கு டெலிட் செய்ய வேண்டும் என்று ஒரு ரசிகர் கேட்க, அப்படியே அப்போ இருக்கட்டும் என்று ஷபானா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“