Advertisment

நடிப்பதற்கு எதிர்ப்பு... அம்மா ஆதரவு... ஷாபனா ஷாஜகான் பார்வதி ஆன கதை

Tamil Serial Update : சீரியலில் பொட்டு வைத்து இந்து பெண் போல் நடிப்பது, இந்து பையனுடன் காதல் காட்சிகளில் நடிப்பது என ஏகப்பட்ட விமர்சனங்கள்  வந்துள்ளது

author-image
WebDesk
Oct 21, 2021 17:43 IST
நடிப்பதற்கு எதிர்ப்பு... அம்மா ஆதரவு... ஷாபனா ஷாஜகான் பார்வதி ஆன கதை

Sembaruthi Serial Actress Shabana Shajahan Life Story : சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போது தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நடிகர் நடிகைகளும் சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகினறனர். இதில் ஒரு சீரியல் ரசிகர்க்ள மத்தியில் பெரும் பிரபலமாகும்போது அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மறைந்து சீரியலில் அவர்களது கதாப்பாத்திரத்தின் பெயரே நிலைக்கும் அளவிற்கு சென்று விடுகிறது.

Advertisment

அந்த வகையில் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தன்கென தனி அமையாளத்தை பெற்றுள்ளவர் ஷாபனா ஷாஜகான். இந்த சீரியலில் இவரது நடிப்பு பெருமளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல் நாயகன் ஆதியுடனான இவரது ரொமான்ஸ் காட்சிக்கொன்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இவரை ரசிகர்கள் பலரும் பார்வதி என்றே அழைக்க தொடங்கியுள்ளனர். அந்த அளவிற்கு இந்த கேரக்டர் செம்ம ரீச்.

ஷாபனா கேரளாவில் பிறந்தவர். இஸ்லாமிய குடும்பத்தை சேர்த்த இவர்,சிறுவயதிலே தந்தையை இழந்ததால்,அம்மா மற்றும் தம்பியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார். அஙகேயே தனது பள்ளிப் படிப்பை முடித்த ஷாபனா தனது கல்லூரி படிப்பை சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். மும்பையில் இருந்தபோதே அவருக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷாபனா, மும்பையில் பல பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சூர்யா டிவியில்.ஒளிபரப்பான விஜயதசமி என்ற தொடரின் மூலம் முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தான் நடித்து வரும் முதல் சீரியலிலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தனது நடிப்பு திறமையால் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ஷாபனா முதலில் நடிக்க சென்றபோது, குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஷபானாவின் அம்மா மட்டுமே மகளின் வெற்றிக்காக கூடவே துணையாக நின்றுள்ளார். சீரியலில் பொட்டு வைத்து இந்து பெண் போல் நடிப்பது, இந்து பையனுடன் காதல் காட்சிகளில் நடிப்பது என ஏகப்பட்ட விமர்சனங்கள்  வந்துள்ளது. ஆனாலும் இந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாத ஷாபனா தற்போது ரசிகர்களின் பிடித்தமான ஒரு நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment