பிரபல சின்னத்திரை நடிகர் ஆர்யன் இன்று தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அவரது மனைவி ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு இணையத்தில் வைரலாக வருகிறது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யன். இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக உள்ளது.
இதனிடையே ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த நடிகை ஷபானாவை காதலித்து வந்த ஆர்யன் கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டர். செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஷபானா சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷபானா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று 29-வது பிறந்த நாளை கொண்டாடும் தனது கணவரும் நடிகருமான ஆர்யனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ள ஷபானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனது வாழ்க்கையின் மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் மனைவியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லாம் இந்த பதிவின் கீழ் வரும் என்று நினைக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன். மைகிங் என்று பதிவிட்டுள்ளார்.
ஷபானாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆர்யனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“