Serial Actress Shamili Video Update : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. சுப்பு சூரியன், பிரியங்கா நல்கரி, வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், அனு என்ற வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில், பிரபலமானவர் நடிகை ஷாமிலி.
கர்ப்பமாக இருந்ததால் ரோஜா சீரியலில் இருந்து இவர் விலகிய நிலையில். விஜே அக்ஷையா அனு கேரக்டரில் நடித்து வருகிறார். இந்ந்லையில், சமீபத்தில் ஷாமிலிக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்டியின் வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல், வள்ளி மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியலில்களில் நடித்தள்ள ஷாமிலி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தனது குழந்தை குறித்து யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷாமிலி, தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறி அந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சீரியலில் இருந்து விலகியதும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷாமிலி அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், தனது பிரசவத்திற்கு முன்பும், குழந்தை பிறந்த பின்னும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது கணவருடன் சேர்ந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை, கிண்டல் செய்து வரும் நிலையில், எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள், பொங்கல் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ள அவர், மீண்டும் ரோஜா சீரியலில் நடிப்பது கஷ்டம் தான், இப்போது குழந்தையை கவனிப்பதால், ரோஜா சீரியலில் நடிக்க முடியாது அதனால் வேறு சீரியல்களில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் ஒருவர், ஆன்டி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ஷாமிலி, குழந்தை பிறந்த டனே ஆன்டியா கொஞ்சம் உடப்பு போட்டேன் அவ்வளவுதான். என்று சொல்ல அருகில் ஷாமியின் கணவர் சிரிப்பை அடக்க முடியாமல், ப்ரேமை விட்டு வெளியில் சென்று விடுகிறார். மற்றொருவர் உஙகள் கணவர் ஹேண்ட்சம் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு வைராகி வருகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil