Advertisment

திருமண கோலத்தில் பிரபல வில்லி நடிகை : இவரை தெரிகிறதா?

வில்லியாக நடித்து பயங்கர வில்லத்தனம் செய்து வந்த இவர் நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்துகிறார்.

author-image
WebDesk
May 31, 2023 16:18 IST
Shamily sukumar

Tamil Serial Actress Shamily Sukumar

ரோஜா சீரியல் மூலம ரசிகர்கள் மத்தியில் சிறந்த வில்லியாக பிரபலமான நடிகை ஷாமிலி சுகுமார் வெளியிட்டுள்ள திருமண கோல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே டாப் ரேட்டிங்கில் இருந்த சீரியல் ரோஜா. இதில் சிபு சூரியன் பிரியங்கா நல்காரி ஜோடியாக நடித்திருந்தனர்.

publive-image

ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்வில்லி ஷாமிலி சுகுமார்தான்.

publive-image

வில்லியாக நடித்து பயங்கர வில்லத்தனம் செய்து வந்த இவர் நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்துகிறார். சன் குடும்ப விருது விழாவில், சிறந்த வில்லிக்கான விருதைப் பெற்றார்.

publive-image

சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி, சின்னத்திரையில் நுழைந்து சில வருடங்களில் பல  சீரியல்களில் நடித்துள்ளார். வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

publive-image

இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் கூட நடித்துள்ள ஷாமிலிக்கு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் ரோஜா சீரியலில் இருந்து பாதியில் வெளியேறினார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷாமிலி தற்போது திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment