Serial Actress Sharin Janu Life Story : சின்னத்திரையில் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் பல சீரியல்கள் அரங்கேறி வருகிறது. இந்த அனைத்து சீரியல்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை துண்டுகிறது என்றே கூறாலம். இதில் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகை சீரியல் மட்டுமல்லாது தங்களது சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகினறனர்.
இதில் சீரியலில் நடித்து வரும் நடிகைகளுக்கு அவவளவு எளிதாக இந்த வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. பல கட்ட முயற்சி போராட்டம், அவமானம் என அனைத்தையும் சந்தித்து தான் இந்த நிலையை அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்றே எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சீரியலில் நடித்து வரும் நடிகை ஷெரின் ஜானு தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ளார்.
ஷெரின் ஜானு இவரை பாரதி கண்ணம்மா துளசி என்றால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தனது கேரக்டர் பெயரை நிலைநாட்டியுள்ள ஷெரின் துணை நடிகையாக இந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இந்த வாய்ப்பு இவருக்கு சதாரரணமாக கிடைத்துவிடவில்லை.
சென்னையில் பிறந்த ஷெரின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை ஜெயின் பள்ளி மற்றும் ஜெயின் காலேஜில் முடித்த நிலையில், பட்டப்படிப்பை சென்னை லயோலோ கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வர முதலில் டிக் டாக் மூலம் பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஏராளமான ஆல்பம் சாங்கில் நடித்துள்ளார்.
ஆனால் இவரின் நடிப்புக்கு குடும்பத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது அம்மா மட்டும் இவருக்கு துணையாக இருந்து நடிப்பில் கவனம் செலுத்த முக்கிய காரணமாக இருந்துள்ளர். கலர்ஸ் தமழில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் அறிமுகமான ஷெரின் அந்த சீரியலில் சித்துவின் காதலியாக நடித்திருப்பார். ஆனால் சக்தி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் இவர் திருமணமாக சந்தோஷசை மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துவார். இதனால் இதனால் இவரின் கதாப்பாத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனால் சில நேரங்களில் இந்த சீரியலை விட்டே போயிடலாமா என நினைத்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் அவரது அம்மா அவரை தேற்றியுள்ளார்.
அதன்பிறகு சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கமலா பாத்திரத்தில் நடிக்ககுஷ்புடன் சேர்ந்து நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து பாக்யலட்சுமி வாய்ப்பு கிடைக்கவே இப்போது ரசிகர்கள் மத்தியில் இவரின் உண்மையான பெயர் மறந்து துளசியாகவே மாறிவிட்டார். இடையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து காணாமல் போன இவர், ஜீ தமிழில் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வந்தார். ஆனால் தற்போது பாரதி கண்ம்மாவில் இவரின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெறுவதால் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
குறுகிய காலத்திலேயே சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கும் துளசி தொடக்கத்தில் கடுமையான மன உளைச்சலை சந்தித்து தற்போது துணை நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil