பூவின் வளர்ச்சிக்கு சூரியன் தேவை… ஷிவானி அரசியல் பேசவில்லை!

Shivani Narayanan Instagram : பிக்பாஷ் சீசன் 4-ல் கலந்துகொண்ட ஷிவானி தமிழகம் முழுவதும் பெரும் பிரபலமடைந்தார்.

Bigboss Celebrity Shivani Narayanan Instagram:  விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016-18-ம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் 3-வது சீசனில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கடந்த சில வராங்களுக்கு முன்பு நிறைவடைந்த பிக்பாஷ் சீசன் 4-ல் கலந்துகொண்ட ஷிவானி தமிழகம் முழுவதும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சக போட்டியளரான பாலாவுடன் நெருங்கி பழகிய இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் எழுந்தது. மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரது அம்மா அவரை திட்டிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் பிரபலமான நபராக இருந்தார். இதில் அவருக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான ஷிவானி, வெளியிடும் ஒவ்வொரு கவர்ச்சியான புகைப்படத்திற்கும் ரசிகர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான லைக்ஸ் கமெண்ட் குவிந்து வருவது வழக்கம். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திரும்பிய ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை நீக்கினார். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்த நிலையில், தற்போது மீண்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் ஷிவானி ஆர்வம் காட்டி வருகிறார்.

ஒவ்வொரு நாள் மாலையும் அவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்காக பல இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்த பலரும் அவர் ஒரு ‘வித்தியாசமான நிலை தலைவர்’ (different Level Leader) என்று பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஷிவானி கூறுகையில், ஒரு பூ வளர சூரியன் மற்றும் மழை இரண்டும் தேவை என்பதை அறிந்து  ‘ஒரு வலிமையான பெண் பாராட்டுகளையும் விமர்சனத்தையும் இரக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress shivani bigboss celebrity instagram post

Next Story
பக்கா லோக்கலா இருக்கு! கிராமத்து கெட்டப்பில் பாராட்டுகளை குவிக்கும் விஜய் டிவி நடிகை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express