ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், மேலும் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில், நடிகை ஸ்ரேயா அச்சன் சித்து சிறப்பு தொற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றாக 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில், காயத்ரி யுவராஜ், பிரணிகா தக்ஷு, சசிலயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சீரியலான ராதாம்பா குதுரு என்ற சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், ’ பிரசவம் காரணமாக காயத்ரி யுவராஜ் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக காவியா பெல்லு நடித்து வருகிறார்.
மேலும் மீனாட்சி கேரக்டரில் நடித்து வந்த நடிகை அர்ச்சனா கடந்த ஆண்டு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்து வருகிறார். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சீரயிலில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், நடிகை ஸ்ரேயா அச்சன் சித்து சிறப்பு தொற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட சீரியலான 'சதுர்பூஜா' மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் சித்து, 'அரண்மனை,' 'நந்தினி,' மற்றும் 'திருமணம்' போன்ற சீரியலிகளில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். தெலுங்கு படமான 'ஜெய் துலுனாடா' என்ற படத்திலும் நடித்துள்ளார். ஸ்ரேயா அஞ்சன் சித்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இணைவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இவரின் வருகை பல திருப்பங்களுக்கு வழியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“