scorecardresearch

40 வயது ஆகியும் நோ திருமணம்; தென்றல் சீரியல் நடிகை விளக்கம்

ஸ்ருதி ராஜ், திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Actress Shruti raj
நடிகை ஸ்ருதி ராஜ்

தென்றல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி ராஜ் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

1995-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அக்ரஜன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மான்புமிகு மாணவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 2008-ம் ஆண்டு வெளியான இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து 2009-ம் ஆண்டு சன் டி.வி.யின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ராஜ், தொடர்ந்து திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு தாலாட்டு சீரியலில் ஸ்ருதி ராஜ் நடித்து வரும் நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சூப்பர் சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள ஸ்ருதி ராஜ் தற்போது 40-வயதை கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டால், எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வராது. அதனால் நான் திருணம் குறித்து யோசிக்கவில்லை. என்னை பற்றியும் என் திருமணம் பற்றியும் என் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ருதிராஜ் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress shruti raj has said why she did not get married after the age of 40