திருமணமான ஒரு வருடத்தில் கணவரை பறிகொடுத்த சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பரியா தற்போது சின்னத்திரை சீரியலில் என்ட்ரி ஆக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.
சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ருதி ஷண்முகப்பிரியா, 2022-ம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது வென்றிருந்தார். திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பின் சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி குடும்பத்தை பார்த்துக்கொள்ள தொடங்கினார்.
இதனிடையே ஸ்ருதிக்கு திருமணமாகி ஒரு வருடமே முடிந்த நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரவிந்த் சேகரின் மரணம் குறித்து பலரும் பல தகவல்களை தெரிவித்திருந்த நிலையில், அவரின் ஆன்மாவுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதுதான் தன்னை பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தற்போது கணவரை இழந்து தனிமையில் இருந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்டரி உள்ளார். அதன்படி சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சுமி சீரியலில் ஸ்ருதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சஞ்சீவ் – ஸ்ருதி ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நாயகி ஸ்ருதியின் தோழி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ருதி சண்முகப்பரியா, தனது கணவர் குறித்து உருக்கமான பதிவுடன், சன் டிவியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி சீரியலில் “விஜி”யாக மீண்டும் வருகிறேன், நாளை முதல் தினமும் மதியம் 2.30 மணிக்கு உங்கள் சின்னத்திரையில். எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“